News Update :

ட்விட்டர் ஜோக்

Tuesday, November 12, 2013

கற்பழிப்புகள் நாடு முழுதும் பெருகி வரும் நிலையில் பெரிய அரசியல்வாதிகளெல்லாம் கற்பழிப்பு பற்றி எந்த கருத்தையும் கூறுவதிலிருந்து தங்களை விலக்கிக் கொண்ட சூழலில் ட்விட்டர் பதிவு ஒன்றில் வெளியான படு மோசமான ஜோக் பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

அந்த ஜோக்கின் தமிழாக்கம் இதோ: “பெண்கள் ஏன் கற்பழிப்பு குறித்து பயப்படவேண்டும்? உங்களை அனுபவிப்பதற்காகவே ஒருவன் வாழ்நாள் முழுதும் சிறையில் வாடும் ரிஸ்க்கை எடுக்கிறான் என்றால் அதனை நினைத்து கர்வம் அடையுங்கள்” என்பதுதான் இந்த வாசகம். இது ஜோக்கா என்பதே சந்தேகமாக உள்ளது. ஒரு மட்டித்தன்மான வாசகம் அவ்வளவே.

இந்த ட்விட்டருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் குவிந்தன. எல்லோரும் அந்த நபரை பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கித் தள்ளியுள்ளார்கள்.

உண்மையில் இந்த ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள் என்ன செய்கின்றன?எழுதத் தெரியாதவர்களெல்லாம் ஏதோ உளற வேண்டியது அதற்கு இவ்வளவு லைக்குகள் என்று அசட்டுப் பெருமிதம் வேறு! எதையாவது உளறி ஏதோ ஒரு குறிப்பிட்ட குழுவிலாவது தனது பிராபல்யத்தை ஏற்படுத்திக் கொள்வது தவிர அங்கு என்னதான் பெரிதாக நடந்து விடுகிறது?

இந்திய நாட்டை உலுக்கும் பொருளாதார வறுமையை விட காமவறுமை பெரிதாகவே இருக்கிறது.

இந்த நிலையில் பெண்களை அவமானப்படுத்தும் இத்தகைய ஜோக்குகள் அல்லது வாசகங்கள் இன்னும் எவ்வளவு மோசமானவை என்பதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். கற்பழிப்பில் ஈடுபடும் காமாந்தகர்களை விட அவற்றை தள்ளி நின்று இதுபோன்று அசட்டுப்பிசட்டு கருத்து உதிர்ப்பவர்கள்தான் தண்டனைக்குரியவர்கள்!



Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.