News Update :

மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம்

Wednesday, September 18, 2013

பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 400 பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் கேட்ஸ் உள்ளார்.

கேட்ஸ் 7,200 கோடி டாலர் தொகையுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக வாரன் பஃபெட் 5,800 கோடி டாலர் தொகையுடன் உள்ளார். ஆரக்கிள் தலைமைச் செயல் அதிகாரி லாரி எலிசன் மூன்றாமிடத்தில் 4,100 கோடி டாலர் தொகையுடன் உள்ளார். இந்தப் பட்டியலில் மூன்று அமெரிக்கவாழ் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தொழிலதிபர் சார்லஸ், டேவிட் கோச் ஆகியோர் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர். வால்மார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வால்டன் குழுவினர் அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர். நியூயார்க் நகர மேயர் புளூம்பெர்க் 3,100 கோடி டாலருடன் 10வது இடத்திலுள்ளார்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி டாலருக்கும் அதிகம். கடந்த ஆண்டு இவர்களின் சொத்து மதிப்பு 1.7 லட்சம் கோடியாகும். பணக்காரர்களின் சாரசரி நிகர சொத்து மதிப்பு 500 கோடி டாலராகும். கடந்த ஆண்டு இது 80 கோடி டாலராக இருந்தது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பணக்காரர்களின் குறைந்தபட்ட சொத்துமதிப்பு 130 கோடி டாலாரகும். இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கியமான பணக்காரர்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுகர்பெர்கும் ஒருவர்.

புளோரிடாவில் வாழும் பாரத் தேசாய் குடும்பத்தின் சொத்துமதிப்பு 220 கோடி டாலராகும். இவர் பட்டியலில் 252-வது இடத்தில் உள்ளார். கலிபோர்னியாவில் சாஃப்ட்வேர் உற்பத்தியாளராக உள்ள ரமேஷ் டி வாத்வானி 210 கோடி டாலருடன் அடுத்த இடத்திலும், துணிகர முதலீட்டாளரான விநோத் கோஸ்லா 150 கோடி டாலருடன் 352-வது இடத்திலும் உள்ளனர். பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 314 பேரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 30 பேருக்கு மட்டும் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.