News Update :

Tamilnadu News

Political

India

Economy

Technology

World News

Cinema News

Showing posts with label history. Show all posts
Showing posts with label history. Show all posts

உலகில் மிகுந்த செல்வாக்குள்ள 25 மொழிகள் - தமிழ் 14 வது இடம்

Friday, September 6, 2013

இன்று உலகில் சுமார் 6,000 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது அதில் சுமார் 30% மொழிகள் 1,000 பேர் அல்லது அதற்கும் குறைவாக தான் பேசப்படுகிறது.

உலகின் 25 மிக செல்வாக்கு மிக்க மொழிகளின் இடத்தை பட்டியல் இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டு ஒரு மொழியை பேசும் மக்களின் எண்ணிகையை வைத்து மட்டும் எடுக்கப்படவில்லை. ஒரு மொழியை பேசுபவர்கள் எண்ணிக்கை, அந்த மொழி எதனை நாடுகளில் தேசிய மொழியாக இருக்கிறது அல்லது இரண்டாவது மொழியாக இருக்கிறது , என்பதை வைத்து இந்த கணக்கீட்டு கணக்கிடப்பட்டுள்ளது.

1) ஆங்கிலம்
உலகில் 500 மில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டுள்ளனர். மேலும் 2 பில்லியன் மக்கள் ஆங்கிலத்தை தங்களது தகவல் தொடர்பு மொழியாக பயன்படுத்துகின்றனர். 57 நாடுகளில் ஆங்கிலம் முதன்மை மொழியாக உள்ளது.

2) பிரெஞ்சு
பிரெஞ்சு உலகின் இரண்டாவது மிக செல்வாக்கு மிக்க மொழியாக திகழ்கிறது. 25 நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. ஆங்கிலத்திற்கு அடுத்து மிகவும் பிரபலமான மொழியாக பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

3) ஸ்பானிஷ்
இதை கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் தாய்மொழியாக கொண்டுள்ளனர் . 20 வது நாடுகளில் பொது மொழி மற்றும் இரண்டாவது மொழியாக உலகம் முழுவதும் பேசப்படுகிறது

4) அரேபிக்
ஆங்கிலம் மற்றும் பிரஞ்சுக்கு அடுத்து அரபு மிக பெரிய மொழியாகும். இது இஸ்லாமியத்தின் மொழி என்ற தனது நிலைப்பாடால் இதை இன்று 100 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 20 நாடுகளில் முதமை மொழியாக பயன்படுத்துகின்றனர்.

5) மாண்டரின்
இதை ஒரு பில்லியன் மக்கள் தனது தாய்மொழியாக பேசிவருகின்றனர். இது மற்ற பெரிய மொழிகளை பேசும் மக்களின் எண்ணிகையை போன்று 3 மடங்கு பெரியது. சீனாவில் பேசப்படும் மொழி, தென்கிழக்கு ஆசியா நாடுகள் தவிர உலகில் பல பகுதிகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

6) ரஷ்யன்
200 மில்லியன் மக்கள் இதை தை மொழியாக கொண்டுள்ளனர். ரஷியன் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் இது பேசப்பட்டு வருகிறது.

7) போர்துகீஸ்
200 மில்லியன் மக்கள் உலகளாவிய பேச்சு மூலம் , போர்த்துகீசியம் உண்மையில் தென் துருவத்தில் ஆங்கிலம், பிரஞ்சு, மற்றும் ஸ்பெயின் ஆகிய மொழிகளுடன் அதிகம் பேசப்படும் மொழி.

8 ) ஜெர்மன்
120 மில்லியன் மக்கள் இத மொழியை பேசுகின்றனர். ஜெர்மன் நாட்டின் முதல் மொழியான இது தொழில்நுட்ப துறைக்கு நெருங்கிய மொழியாகும். இதனால் உலகம் முழுதும் இதன் வளர்ச்சி கணிசமான செல்வாக்கை செலுத்துகிறது.

9) ஜப்பானிஸ்
சுமார் 120 மில்லியன் பேர் இந்த மொழியை பேசுகின்றனர், அவர்கள் பெரும்பாலும் ஜப்பான் எல்லைகளில் வாழ்கிறார்கள். இதை அவ்வளவு எளிதாக கற்றுக்கொள்ளும் மொழி அல்ல.இதன் விளைவாக அதன் மொழி ஜப்பானின் தொழில் மற்றும் வர்த்தக பகுதிகளில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை பெறவில்லை.

10) ஹிந்தி/உருது
இது உருது மொழியுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. தங்கள் எழுத்து முறையில் மட்டுமே வேறுபடுகின்றன. உருது, பாக்கிஸ்தான் உத்தியோகபூர்வ மொழி, ஹிந்தி, இந்தியாவின் அதிகமாக பேசப்படும் மொழி.உருது அரபு எழுத்துக்களை கொண்டது, ஹிந்தி தேவநாகரி எழுதுக்களை கொண்டது.இரண்டு மொழிகளையும் சேர்த்து சுமார் 200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் பேசுகின்றனர். சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழிகளை தங்களது இரண்டாவது மொழியாக பேசுகின்றனர்.

11) மலாய்
சுமார் 100 மில்லியன் மக்கள் இந்த மொழியை உலகம் முழுதும் பேசுகின்றனர். மலேஷியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது.

12) பார்சி(பிரிஷியன்)
100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. மத்திய ஆசியாவில் "மதிப்புமிக்க கலாச்சார மொழி" என கருதப்படும் நீண்ட வரலாறு கொண்டது.

13) சுவாஹிலி
ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் வர்த்தக மொழியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது, சுவாஹிலி மொழியை சுமார் 100 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.இது பல நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். இதன் செல்வாக்கு சீராக வளர்ந்து வருகிறது,

14) தமிழ்
முக்கியமாக இந்தியாவின் பல தென்னிந்திய மாநிலங்களில் பேசப்படுகிறது, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. செம்மொழியான அந்தஸ்தை பெற்றுள்ள தமிழ் மிகவும் தொன்மையானது. இந்த மொழியை உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

15) இத்தாலியன்
ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 65 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது உலகில் பல பகுதிகளில் இரண்டாவது மொழியாக பேசப்படுகிறது, இந்த எண்ணிக்கையை சேர்த்து பார்த்தல் சுமார் 90 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இத மொழியை பேசுகின்றனர். வாடிகனின் அதிகாரப்பூர்வ மொழி இது.

16) டச்சு
50 மில்லியன் மக்களால் உலகம் முழுதும் பேசப்படுகிறது. இது ஐரோப்பா முதல் தென் அமெரிக்க மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது.

17) பெங்காலி
200 மில்லியன் மக்கள் உலகம் முழுதும் இந்த மொழியை பேசுகின்றனர். பெங்காலி உலகின் ஆறாவது பேச்சு மொழியாகா கருதபடுகிறது. வங்காள தேசத்தில் இந்த மொழி அதிகளவில் பேசப்படுகிறது.

18) துர்கிஸ்
மத்திய ஆசியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 83 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு (middle east ) நாடுகளில் கணிசமான அளவில் பேசப்படுகிறது.

19) வியட்நாமிஸ்
உலகம் முழுதும் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். அந்தளவிற்கு சிறப்பான மொழி என்ற பெயர் இல்லை.இதை வியட்நாம் மக்கள் மட்டுமே பேசுகின்றனர்.

20) போலிஸ்
ரஷியன் மொழிக்கு பின்னர் இரண்டாவது மிக பரவலாக பேசப்படுவது போலிஸ் மொழி. சுமார் 46 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர்.

21) ஜாவானீஸ்
ஜப்பனீஸ்-சுடன் குழப்பி கொள்ள கூடாது, ஜாவானீஸ் கிழக்கு ஆசிய தீவான ஜாவாவின் முதன்மை மொழி ஆகும். இந்தோனேஷியா அருகில் காணப்படும் ஜாவா தீவுகளில் சுமார் 90 மில்லியன் மக்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

22) பஞ்சாபி
சுமார் 90 மில்லியன் பஞ்சாபி பேசுபவர்கள் உள்ளனர். இதில் பெருன்பாலனோர் பாக்கிஸ்தானில் வசிக்கிறார்கள். இந்திய மாநிலம் பஞ்சாப்பில் முதன்மை மொழியாக இருக்கிறது. இது சற்று கடினமான மொழி என்றும் சொல்லப்படுகிறது.

23) தாய்
உலகம் முழுவதும் சுமார் 25 மில்லியன் மக்காளால் பேசப்படுகிறது. இது தாய்லாந்து நாட்டின் தேசிய மொழி.

24) கான்டோனிஸ்
உலகம் முழுவதும் சுமார் 60 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இது தெற்கு சீனா மற்றும் ஹாங்காங் பகுதிகளில் பேசப்படுகிறது.

25) கொரியன்
வட கொரியா, தென் கொரியா, சீனா கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது என்றாலும், அது கொரிய தீபகற்பத்தில் எல்லைகளுக்கு அப்பால் அந்தளவிற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு அடையவில்லை

மூலம்: லிஸ்ட்25 வலைத்தளம்.
மொழியாக்கம் - ராஜு.சரவணன்

திருவள்ளுவர் - தெரியாத விஷயங்கள்

Thursday, September 5, 2013

திருவள்ளுவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள்.

 அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.
திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன.

அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:
“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

மூழ்கிப் போன உண்மைகள்

Saturday, August 31, 2013

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் "நாவலன் தீவு" என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலைநாடு, ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன் "அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்" ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .

இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய "மதுரையில்" கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!.. இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் , இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !

கச்சத்தீவை மீட்க முடியாது

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க முடியாது என்றும் அது இலங்கை எல்லைக்குட்பட்டது என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பதில் கூறியுள்ளது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதி கச்சத்தீவு. இந்த கச்சத்தீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து கச்சத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 800க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தும் வருகிறது.

இந்நிலையில் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான இன்றைய விசாரணையின் போது கச்சத்தீவு, இலங்கை எல்லைகுட்பட்ட பகுதி. அதனால் இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது. 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

திண்டுக்கல் கோட்டை. . .

Monday, August 26, 2013

திண்டுக்கல் பூட்டுக்கு மட்டும் பெயர் பெற்றது கிடையாது திண்டுக்கல் கோட்டைக்கும் தான் புகழ் பெற்றது இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1755 இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன் திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.

இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.

திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின் மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில் வந்தது.

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது.குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல் கோட்டைதான். இது 1799 ஆம் ஆண்டு முதல் 1947 வரை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்தது. இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவீரன் பூலித்தேவன் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பிக்க இந்தக் கோட்டைக்குள் சென்றார். அதன்பிறகு பூலித்தேவனை யாரும் பார்க்கவில்லை என்றும் ஒரு வரலாறு உள்ளது. வரலாறைப் போலவே கோட்டையும் மிகவும் வசீகரமானது. யாவரும் காணலாம்.

இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.

Life Style

Religious

Hinduism

History

Gallery

Special

Online jobs

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.