News Update :

Tamilnadu News

Political

India

Economy

Technology

World News

Cinema News

Showing posts with label technology. Show all posts
Showing posts with label technology. Show all posts

நமது பாஸ்வேர்ட் திருட்டு போகாமலிருக்க...

Wednesday, September 18, 2013

வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.

இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.

அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். மிக ஸ்ட்ராங்கான பாஸ்வேர்ட் அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.

1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக் கட்டுக் கோப்பான தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பை கம்ப்யூட்டரில் அமைப்பவர்கள், இவற்றிற்கான பாஸ்வேர்ட்கள் அமைக்க, அதற்கென்று பாஸ்வேர்ட் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம்.

இவை ரேண்டமைஸ்டு பாஸ்வேர்ட் என்று சொல்லப்படும், யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய பாஸ்வேர்ட் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.

2. பாஸ்வேர்டில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.

3. பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். dubidubi என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே. இதனை d*uBi(dU(bi என்ற படி இன்னும் நீளமாக அமைக்கலாம்.

4. பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது. இவற்றை நினைவில் வைத்து அவ்வப்போது மாற்றுவது சற்று கடினமே.

நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.
ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.

இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன.

ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.


மெமெரி கார்டு - சில தகவல்கள்

Tuesday, September 17, 2013

செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது.

ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO.

இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்….
எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன. எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters). SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். இன்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும். எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும். எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும். SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம். ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம்.
ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

செல் நம்பர் மறந்துவிட்டதா?

Saturday, September 14, 2013

செல்போன் வருவதற்கு முன்பு, பொதுவாக ஒருவர் அவருக்கு நெருங்கியவர்களின் தொலைபேசி எண்ணை நினைவில் வைத்திருப்பார். அவ்வாறு ஒருவருக்கு ஒரு சிலரது தொலைபேசி எண்களாவது நினைவில் இருக்கும்.

ஆனால், எப்போது லேன்ட் லைன் போன்களை கைவிட்டு நாம் செல்பேசிக்கு மாறினோமோ அப்போது விரல் நுனியில் இருந்த போன் எண்கள் எல்லாம் செல்போன் கீ பேர்ட் நுனிக்கு சென்றுவிட்டது.
இதனால், தற்போது பெரும்பாலானோர் செல்போன் எண்களை நினைவில் வைத்துக் கொள்வதே இல்லை. சரி இதனால் என்ன? எப்போதும் செல்போனை கையிலேயே தானே வைத்திருக்கிறோம், தேவையானவர்களின் எண்ணை போனில் பார்த்துக் கொண்டால் போகிறது என்று சொல்வது எங்களுக்குக் கேட்கிறது.

சரி மற்றவர்களின் செல்போன் எண்ணை மறந்துவிட்டால் செல்பேசியில் பார்த்துக் கொள்ளலாம். திடிரென ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் செல்போன் எண்ணே உங்களுக்கு மறந்துவிட்டால்...
அது எப்படி மறக்கும் என்று கேட்காமல்.. மறந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள். சிரமமே இல்லை. ஒவ்வொரு செல்போன் சேவையும், உங்களது செல்போன் எண்ணை அறிந்து கொள்ள வசதி செய்துள்ளது.

அதனை அறிந்து கொள்ள...
உங்கள செல்பேசி எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

இ-சிகரெட் உஷார்

Thursday, September 5, 2013

ஐ.டி நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பி.பி.ஓக்களில் பணியாற்றும் இளைஞர்களில் சிலர் தற்போது நூதன போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இ,சிகரெட்டில் போதை வரவழைக்கும் நறுமணத்தை கலந்து புகைத்து உச்சகட்ட போதையில் திளைக்கின்றனர். எவ்வித பரிசோதனையிலும் இந்த போதை கண்டறியப்படுவதில்லை என்பதால் இளைஞர்களிடையே இது அதிவேகமாக பரவி வருகிறது.

தரமணி, திருவான்மியூர், அடையாறு, சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கேளம்பாக்கம், காரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐ.டி நிறுவனங்கள், பி.பி.ஓக்கள் அதிகளவில் உள்ளன. கேளம்பாக்கம் மகேந்திரா சிட்டி, தாம்பரம், சானடோரியம் மெப்ஸ், ஒரகடம் போன்ற பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவை தவிர ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.

இதில் ஐ.டி மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பணியாற்றுவோர் மாதம் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சம் வரை சம்பளம் வாங்குவதால் செலவுகளை பற்றி அவர்கள் கவலையே படுவதில்லை. இதுபோன்ற நிலையில் சிலரிடம் மது, போதை விருந்துகளுக்கும் பஞ்சமில்லாமல் உள்ளது. இந்நிலையில் அதிக வருமானம் பெறும் இளைஞர்களிடையே தற்போது புதுவித போதை பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் புகையிலை, சிகரெட்டுக்கு மாற்றாக இ, சிகரெட் என்ற சிகரெட் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வேப்பரைஸ்டு சிகரெட் எனப்படும் இந்த இ,சிகரெட் ரீபிள் பேனா போல நீண்ட வடிவத்தில் காணப்படும்.

இதில் நறுமணத்தை அளிக்கும் கேட்ரிஜ் இருக்கும். அந்த சிகரெட் பேட்டரியால் இயங்கும். அதை வாயில் வைத்து இழுக்கும்போது கேட்ரிஜ்ஜில் உள்ள நறுமணத்தோடு கூடிய புகை போன்ற மெல்லிய இழை மூச்சுக்குழலுக்குள் சென்று திரும்பும். ஆனால் புகை ஏதும் வராது. இந்த சிகரெட்டை வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவுக்குள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளன. சென்னையை பொறுத்தவரை 21 இடங்களில் இந்த ஏஜென்சிகள் உள்ளன. இவற்றில் இ,சிகரெட்டை வழக்கமாக பெட்டிக்கடைகளில் வாங்குவது போல வாங்க முடியாது. ஆன்லைன் முறையில் பதிவு செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும். இந்த சிகரெட் தரத்துக்கு ஏற்ப ஒரு சிகரெட் ரூ.3500 வரை விற்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த சிகரெட் தற்போது போதை பொருளாக பயன்படுத்துவது அதிகரித்து விட்டது. புகையிலை இல்லாத, நிகோடின் இல்லாத சிகரெட் என்ற நிலை மாறி, அதிகளவு நிகோடின் கலந்த நறுமண கலவையை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அதிகளவு நிகோடின் கலக்கப்பட்ட இ,சிகரெட்டை பயன்படுத்துவோர் கஞ்சா அடித்த போதைக்குள்ளாகின்றனர். சிலர், போதை தரும் நறுமணங்களையும் வாங்கி இ,சிகரெட் கேட்ரிஜ்ஜில் பயன்படுத்தி சிகரெட்டை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் 3 மணி நேரத்தில் தொடங்கி 7 மணி நேரம் வரை நிறை போதையில் காணப்படுகின்றனர்.

கேட்ரிஜ்ஜில் கலக்கப்படும் ‘ஜிகால்’ என்ற ஒரு வகை பிளேவரில் ஆல்கஹாலில் உள்ளது போல 2 மடங்கு போதை உள்ளது. இந்த பிளேவரை இளைஞர்கள் பலர் தற்போது துணிச்சலாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த போதையில் இருப்பவர்களை எவ்வித மருத்துவ பரிசோதனையிலும் கண்டறிய இயலாது என்பதால் பணியாற்றும் இடங்களுக்கும் பலர் போதையில் செல்ல தொடங்கியுள்ளனர்.

என்னென்ன பாதிப்பு வரும்: மற்ற சிகரெட்டுகளை போல இ,சிகரெட்டுகளை சில நொடிகளில் புகைத்து விட முடியாது. ஒரு சிகரெட் பிடிக்க முழுமையாக 10 நிமிடம் தேவைப்படும். இவ்வாறு தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு புகையே இல்லாத புகை போன்ற உணர்வை அனுபவிக்கும்போது வாய் வலி, மூச்சுகுழாயில் வலி, இரைப்பு போன்றவை ஏற்படும். தொடர்ந்து இந்த சிகரெட்டை பிடித்து வருவோருக்கு நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும். தற்போது கலக்கப்படும் போதை பிளேவரால் போதையிலேயே மரணம் ஏற்படும்.

பல நாடுகளில் தடை

இ,சிகரெட்டை அமெரிக்காவில் மட்டும் 2.5 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சிகரெட்டால் நன்மையை விட தீமை அதிகம் என்ற நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இ, சிகரெட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

கலப்பால் ஆபத்து

இ,சிகரெட் குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ஹசன் கூறியதாவது: சாதாரண சிகரெட்டில் நிகோடின், தார் போன்ற கலவைகள் உள்ளன. சிகரெட் பிடித்து பழக்கப்பட்டவர்கள் அதை விடமுடியாமல் தவிக்கும்பட்சத்தில் எதையாவது வைத்து ஊதிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதுபோன்ற நிலையில் நிகோடின், தார் கலப்பில்லாத இ,சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டது. கலப்பில்லாத இ,சிகரெட்டால் பாதிப்பு இல்லை. அதே நேரம் அதில் வேறு பொருளை கலந்தால் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

எக்ஸ்ட்ரா தகவல்

இ, சிகரெட்டில் கார்சினோஜெனிக் என்ற மூலக்கூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆக்ரோலின், அசிட்டால்டிலைடு போன்ற மூலக்கூறுகள் இதில் கலக்கின்றன. இவை உடல் நலத்துக்கு கேடானவை. நிகோடின் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டாலும் தற்போது கிடைக்கும் சிகரெட்டில் 2 மடங்கு நிகோடின் பிளேவர் உள்ளது.

இன்டர்நெட் ஒரு போதை

Tuesday, September 3, 2013

சிகரெட், மது போன்று இன்டர்நெட்டும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லீஸ் பல்கலைகழகத்தை சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன், மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார்.

அதாவது 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருநாள் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியாமல் போனால் பதட்டம் ஏற்படுவதாகவும், அதனால் விரக்தி அடைவதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர் அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக பேஸ்புக், டுவிட்டரில் அப்பேட் செய்த பிறகு தான் இரவு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இல்லையென்றால் தூக்கம் வராதாம்.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர் இன்டர்நெட் இல்லை என்றால் பிரச்சினையில்லை சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிகரெட்டுக்கு, மதுவுக்கு எப்படி அடிமையாகி விடுகிறார்களோ அதே போன்று தான் இன்டர்நெட்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்போன் - அபாயம்

Monday, September 2, 2013

மும்பை: செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் விதைப் பை சேதமாகிப்போய் விடும் என்று மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.

குட்டி மைக்ரோவேவ் அடுப்பு போலவாம். பொசுங்கிப் போய் விடுமாம் விதைப் பை.

மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

மொபைல் போன் டவர்களால் புற்றுநோய் ஆபத்து:
வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

காபி .. ஊறுகாய் மாதிரி.. :
எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.

காது சவ்வு கிழிஞ்சிடும்...:
தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்...

மலட்டுத்தன்மையும் வந்து சேரும்:
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்.. குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான் என்றும் கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.

கதிர்வீச்சு நல்லதுதான்..:
ஆனால் பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திரு்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார். இனிமேல் பேன்ட் போடும்போது அதில் பர்ஸை மட்டுமே வையுங்கள்.. செல்லை வச்சுராதீங்க..

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில்இ இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களிடமும், பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் :செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.


செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

செல் போன் அறிவியல் தகவல்கள் இதோ: செல் போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்குகிறது. இதை முறையே என்று அழைக்கலாம். அந்த வகையில் மிக குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அலைகளையே செல்போன் வெளியிடுகிறது. அந்த வகையில் இதை கதிர் வீச்சு என்று கூட அழைக்க முடியாது (காரணம் வெளிவரும் சக்தி மிக மிக குறைவு). மேலும்செல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளயே நாம் காலம் காலமாக உபயோகபடுத்தி வந்த ரேடியோகளும் வெளியிடுகின்றன. ஆனால் ரேடியோகளுக்கும்செல் போன்களுக்கும் உள்ள வித்தியாசம் நாம் உபயோகபடுத்தும் விதத்தில்தான் உள்ளது. அதாவது

நாம் செல் போன்களை உபயோகபடுத்தும்போது நாம் நம் உடற்பகுதியுடன் ஒட்டி தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் ரேடியோகளை அவ்வாறாக பயன்படுத்தியதில்லை. எனவே இந்த சக்தி குறைந்த ரேடியோ அலைகள் நம் உடல் திசுகளுக்குள்ளே மிக எளிதாக ஊடுருவி விடுகிறது.  இந்த செல் போன் கம்பனிக்கு கம்பெனி மாடலுக்கு மாடல் வேறுபடுகிறது.

எனவே செல் போன்கள் வாங்கும்போது நல்ல தரமான கம்பனிகளை தேர்வு செய்து வாங்குங்கள். அதற்கு முன்னால் அந்த குறிப்பிட்ட மாடல் செல் போன்களின் SAR 1.6watt/kg இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே வாங்குங்கள். செல்போன்கள் அலைகள் உடனடியாக நம் உடம்பில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது அல்ல...ஆனால் காலப்போக்கில் கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வரும் என்பது சத்தியமே. இதை வியாபார நோக்கத்திற்காக கம்பனிகள் கூறுவதில்லை என்பதும் உண்மையே. சரிகாலப்போக்கில் என்னென்ன நோய்கள் செல் போன்களால் வர வாய்ப்பு உண்டு1. Headache 2. Alzheimer's disease மிக கொடிய வகை மறதி நோய் உயிரை குடிக்கும் வல்லமை இதற்கு உண்டு) நரம்புகளை முடக்கும் வியாதி) 4. Brain tumour மூளை புற்றுநோய்) உடற்தளர்ச்சி )ஆம். இவை அனைத்தும் சத்தியமான உண்மையே! ஆனால் உங்கள் உடற் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவை எதுவும் வராமலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பாதிப்புகளை உருவாக்கலாம்.

அல்லது மிக சீக்கிரமாகவும் பாதிப்புக்கு உள்ளாகலாம். கண்டிப்பாக நம்மால் செல்போன்களை இழந்து வாழ முடியாது.

இனி வரும் காலங்களில் வெளிவரும் செல்போன்களில் தகவல்கள் sticker ஒவ்வொரு செல்போன்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சட்டம் கொண்டு வர வேண்டியதுநம் அரசின் கடமை. அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது.


ஃபேஸ் புக் - கண்காணிப்பில் இந்தியா 2வது இடம்

Thursday, August 29, 2013

பேஸ் புக் எனப்படும் முகநூல் பயன்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தரும்படி கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முகநூல் நிறுவனம் தனது செயற்பாடுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இதை தெரிவித்திருக்கிறது. முகநூல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உலக அளவில் அதிகபட்சமாக முகநூலர்களின் தகவல்களைக் கோரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, கேனடா ஆகிய இருநாடுகளும் இணைந்து முதல் இடத்தில் இருக்கின்றன.

அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியா இருப்பதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் இந்தியா 3245 வேண்டுகோள்களை முகநூல் நிறுவனத்திடம் வைத்திருக்கிறது. இதில் 4144 முகநூலர்களின் தகவல்களை இந்திய அரசு கோரியிருக்கிறது. இவற்றில் சுமார் 50 சதவீத கோரிகைகளுக்கு முகநூல் நிறுவனம் பதில் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகளின் இந்த முயற்சிகள் இணையசுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை பாதிக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முகநூலின் இந்த அறிக்கை வரவேற்கத்தக்க முன்முயற்சி என்றாலும், இந்த அறிக்கை முழுமையானதுமல்ல, போதுமானதுமல்ல என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பு மற்றும் சமூகம் தொடர்பான ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன்.முகநூல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில், இந்திய அரசு என்னவிதமான தகவல்களைக் கோரியது என்பது குறித்தும், முகநூல் நிறுவனம் என்னவிதமான தகவல்களை பகிர்ந்து கொண்டது என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள், மற்ற நாடுகளைவிட தமது குடிமக்களை தமது நேரடி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற நோக்கிலேயே இத்தகைய முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாக கருதுகிறார்.

இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை என்பது இன்னமும் பெருமளவில் தொழிலாளர் சார்ந்த துறையாக மட்டுமே தொடர்வதாலும், அறிவுசார் துறையாக அது இன்னமும் முழுமையாக பரிணமிக்காமலிருப்பதாலும் இந்திய அரசின் மையப்படுத்தப்பட்ட இணைய கண்காணிப்பு கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் குறித்து, தகவல் தொழில்நுட்பத்துறையிலிருந்து உரிய அளவில் எதிர்ப்பு உருவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், தனிமனித அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய சமூகங்களிடம் போதுமான புரிதலும் உரிய விழிப்புணர்வும் வளர்க்கப்படவில்லை என்று கூறும் முரளி ஷண்முகவேலன், இத்தகைய சூழலை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், இணைய கண்காணிப்பு தொடர்பிலான தமது கட்டுப்பாட்டை அதிகப்படுத்திக்கொள்ள பயன்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தார். அரசுகளின் இத்தகைய முயற்சிகளுக்கு, தகவல் தொழில்நுட்பத் துறைக்குள்ளிருந்தே மேலதிகமான விமர்சனங்கள் வரவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

சிறுவர்களைக் காப்பாற்ற

Thursday, August 22, 2013

இணைய பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

1. தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்: நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள் http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். உங்கள் வீட்டுச் சிறுவன் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும்.
கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் (family safety tools) பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன.

2. குடும்ப பாதுகாப்பிற்கான டூல்ஸ்: Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை (filters) அமைக்கலாம். பாலியல் தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.

3. சிறுவர்களின் பிரவுசர்களை கண்காணிக்கவும்: சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர். இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.

4. சமூக வளைதளங்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும். ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர்.

5. பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும். “நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். “அப்படி பார்ப்பது நல்லதுதான்” என்று அவர்கள் கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம். உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்.

Gmail Backup

ஜிமெயில் மின்னஞ்சல் சேவை மூலம் பரிமாறப்படும் மின்னஞ்சல்களை பாதுகாப்புக் கருதி பேக்கப் செய்வதற்கு BackUp Gmail எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பிளின் Mac OS இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளானது ஒன்றிற்கு மேற்பட்ட ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி பேக்கப் செய்யும் வசதியை தருகின்றது.

இலகுவாக கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள BackUp Gmail மென்பொருளில் பேக்கப் செய்த மின்னஞ்சல்களை மீண்டும் சேமிக்கும் (Restore) வசதியும் தரப்பட்டுள்ளது.

கூகுளின் 3லட்ச ரூபாய் பரிசு அறிவிப்பு!!!

கூகுள் நிறுவனம் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் சேவைகளில் இருக்கும் செக்கியூரிட்டி குறைபாடுகளை கண்டுபிடித்து தகவல் குடுப்பவர்களுக்கு 5000 டாலரை பரிசாக தர உள்ளது. அதாவது கிட்டதிட்ட 3,21,675 ரூபாய் பரிசாக வழங்கப்படும். டெக்கனாலஜியில் அதிகம் திறமை உள்ளவர்கள் கூகுள் சேவைகளில் உள்ள பக்ஸ்களை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்து பரிசை வெல்லாம். ஒவ்வொரு பக்ஸ் ரிப்போர்ட்டுக்கும் பரிசு தனித்தனியாக உண்டு. 
 

 
கூகுளின் 3லட்ச ரூபாய் பரிசு அறிவிப்பு!!! கூகுள் நிறவனம் இதுவரை கிட்டதிட்ட 13கோடிகளை பரிசாக வழங்கியுள்ளதாம். சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் உலகின் முன்னனி நிறுவனமான மைக்கிரோஷாப்ட் போன்றைவைகளும் இது போன்ற பரிசுகளை ஏற்கனவே அறிவித்துள்ளன. அண்மையில் கூட ஹலீல் என்பவர் பேஸ்புக் ஓனரின் அக்கவுன்டையே ஹாக் செய்து பேஸ்புக்கில் உள்ள செக்கியூரிட்டி குறைபாடுகளை தெரிவித்தார். அவருக்கு 500 டாலரை பரிசாக பேஸ்புக் வழங்கியது. இது போன்ற வாய்ப்புகளை டெக்னாலஜியில் சிறந்து விளங்குபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Life Style

Religious

Hinduism

History

Gallery

Special

Online jobs

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.