News Update :

"தலைவா' திரைப்படத்துக்கு மீண்டும் மிரட்டல்

Thursday, August 22, 2013

சென்னையில் "தலைவா' திரைப்படத்துக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்த விவரம்:
நடிகர் விஜய், நடிகை அமலா பால் நடித்த "தலைவா' திரைப்படம் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளுக்கு மிரட்டல் கடிதம் வந்ததாலும், வெடிகுண்டு வைக்கப்படும் என போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாலும் திரைப்பட உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்தனர்.
இந்நிலையில் திரைப்பட குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சியின் காரணமாக, "தலைவா' திரைப்படம் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கத்தில் அந்த திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் "தலைவா' திரைப்படத்தை திரையிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இது குறித்து அந்த திரையரங்கு மேலாளர் ஜெயக்குமார், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.