வேலூர் மாவட்டம் வாலாஜா கோட்டை பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை மகன் மாதவன் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசால்
என்பவரது மகள் ஜெயசுதா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டது.
இன்று வாலாஜாவில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். இருவீட்டாரும் தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு பத்திரிகை அழைப்பிதழ் கொடுத்து வரவழைத்தனர்.
வாலாஜாவில் உள்ள கோட்டாராமையா திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.
சேலத்தில் இருந்து மணப்பெண் வீட்டார் நேற்று இரவு வந்தனர். இதனை தொடர்ந்து பெண் அழைப்பு, மாப் பிள்ளை அழைப்பு போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடந்தது. பெண், மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மணப்பெண் ஜெயசுதாவுக்கு திடீரென மாப்பிள்ளை பிடிக்காமல் போனது. இதுபற்றி அவர் தனது அக்காள் கணவரிடம் கூறி அழுதுள்ளார். தனக்கு திருமணம் வேண்டவே வேண்டாம் எனக்கூறி அடம்பிடித்துள்ளார். இதனால் மணப்பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர்.
மாப்பிள்ளையை அலங்காரம் செய்து மணமேடைக்கு அழைத்து வர தயாராகினர். அந்த நேரத்தில் மணப்பெண் திடீரென மாயமானார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறிய ஜெயசுதா வாலாஜா போலீஸ் நிலையம் சென்றார். மாப்பிள்ளை பிடிக்காததால் தனக்கு திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று புகார் கூறினார். இந்த தகவல் திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மாப்பிள்ளை, பெண் வீட்டார் போலீஸ் நிலையம் விரைந்தனர். திருமணத்துக்கு மணப்பெண் சம்மதிக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இருவீட்டாரும் போலீஸ் நிலையத்தில் காரசாரமாக பேசிக் கொண்டனர். திருமண ஏற்பாடுகள் செய்த செலவை நஷ்டஈடாக தரவேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நடந்த இந்த சம்பவம் குறித்து மணமகன் மாதவன்,
’’எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம். வாலாஜாவில் மளிகை கடை நடத்தி வருகிறேன்.
எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர். அப்போது சேலத்தை சேர்ந்த ஜெயசுதாவை பார்த்து பேசி முடித்தனர். ஜெயசுதா சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடையில் வேலைபார்த்து வந்தார். தரகர் மூலம் பேசி முடித்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் உள்ள பெண் வீட்டில் வைத்து நிச்சயதார்த்த விழா நடந்தது. அப்போது அவர் என்னை பார்த்தார். அப்போதாவது என்னை பிடிக்கவில்லை என்று கூறியிருக்கலாம்.
நேற்று இரவு நடந்த வரவேற்பு விழாவிலும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அப்போதும் அவர் பிடிக்கவில்லை என்று கூறவில்லை.
திருமண நேரத்தில் மணமேடைக்கு வராமல் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறியது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறவில்லை’’ என்று வேதனையை தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment