News Update :

செல்போன் - அபாயம்

Monday, September 2, 2013

மும்பை: செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் விதைப் பை சேதமாகிப்போய் விடும் என்று மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.

குட்டி மைக்ரோவேவ் அடுப்பு போலவாம். பொசுங்கிப் போய் விடுமாம் விதைப் பை.

மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

மொபைல் போன் டவர்களால் புற்றுநோய் ஆபத்து:
வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

காபி .. ஊறுகாய் மாதிரி.. :
எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.

காது சவ்வு கிழிஞ்சிடும்...:
தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்...

மலட்டுத்தன்மையும் வந்து சேரும்:
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்.. குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான் என்றும் கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.

கதிர்வீச்சு நல்லதுதான்..:
ஆனால் பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திரு்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார். இனிமேல் பேன்ட் போடும்போது அதில் பர்ஸை மட்டுமே வையுங்கள்.. செல்லை வச்சுராதீங்க..

தினசரி கையடக்கத் தொலைபேசியில் பேசுவோருக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில்இ இஸ்ரேலில் உள்ள டெல்அவில் பல் கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் யனிவ் ஹம்ஷானி தலைமையிலான குழுவினர் ஒரு புதிய ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களை புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீண்ட நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களிடமும், பேசாதவர்களிடமும் இருந்து எச்சில் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில், அதிக நேரம் கையடக்கத் தொலைபேசியில் பேசுபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான அறிகுறி இருந்தது தெரியவந்தது

இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14 நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் :செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.


செல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர் அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

செல் போன் அறிவியல் தகவல்கள் இதோ: செல் போன்கள் ரேடியோ அலைவரிசைகளை பயன்படுத்தி இயங்குகிறது. இதை முறையே என்று அழைக்கலாம். அந்த வகையில் மிக குறைந்த சக்தி கொண்ட மின்காந்த அலைகளையே செல்போன் வெளியிடுகிறது. அந்த வகையில் இதை கதிர் வீச்சு என்று கூட அழைக்க முடியாது (காரணம் வெளிவரும் சக்தி மிக மிக குறைவு). மேலும்செல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சுகளயே நாம் காலம் காலமாக உபயோகபடுத்தி வந்த ரேடியோகளும் வெளியிடுகின்றன. ஆனால் ரேடியோகளுக்கும்செல் போன்களுக்கும் உள்ள வித்தியாசம் நாம் உபயோகபடுத்தும் விதத்தில்தான் உள்ளது. அதாவது

நாம் செல் போன்களை உபயோகபடுத்தும்போது நாம் நம் உடற்பகுதியுடன் ஒட்டி தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் நாம் ரேடியோகளை அவ்வாறாக பயன்படுத்தியதில்லை. எனவே இந்த சக்தி குறைந்த ரேடியோ அலைகள் நம் உடல் திசுகளுக்குள்ளே மிக எளிதாக ஊடுருவி விடுகிறது.  இந்த செல் போன் கம்பனிக்கு கம்பெனி மாடலுக்கு மாடல் வேறுபடுகிறது.

எனவே செல் போன்கள் வாங்கும்போது நல்ல தரமான கம்பனிகளை தேர்வு செய்து வாங்குங்கள். அதற்கு முன்னால் அந்த குறிப்பிட்ட மாடல் செல் போன்களின் SAR 1.6watt/kg இருக்கிறதா என்பதை ஊர்ஜிதம் செய்த பிறகே வாங்குங்கள். செல்போன்கள் அலைகள் உடனடியாக நம் உடம்பில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு சக்தி வாய்ந்தது அல்ல...ஆனால் காலப்போக்கில் கண்டிப்பாக மாற்றங்களை கொண்டு வரும் என்பது சத்தியமே. இதை வியாபார நோக்கத்திற்காக கம்பனிகள் கூறுவதில்லை என்பதும் உண்மையே. சரிகாலப்போக்கில் என்னென்ன நோய்கள் செல் போன்களால் வர வாய்ப்பு உண்டு1. Headache 2. Alzheimer's disease மிக கொடிய வகை மறதி நோய் உயிரை குடிக்கும் வல்லமை இதற்கு உண்டு) நரம்புகளை முடக்கும் வியாதி) 4. Brain tumour மூளை புற்றுநோய்) உடற்தளர்ச்சி )ஆம். இவை அனைத்தும் சத்தியமான உண்மையே! ஆனால் உங்கள் உடற் எதிர்ப்பு சக்தியை பொருத்து இவை எதுவும் வராமலோ அல்லது மிக குறைந்த அளவிலோ பாதிப்புகளை உருவாக்கலாம்.

அல்லது மிக சீக்கிரமாகவும் பாதிப்புக்கு உள்ளாகலாம். கண்டிப்பாக நம்மால் செல்போன்களை இழந்து வாழ முடியாது.

இனி வரும் காலங்களில் வெளிவரும் செல்போன்களில் தகவல்கள் sticker ஒவ்வொரு செல்போன்களில் ஒட்டப்பட்டு இருக்கும் சட்டம் கொண்டு வர வேண்டியதுநம் அரசின் கடமை. அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது.


Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.