கச்சத்தீவை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மாநிலங்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பிய அதிமுக உறுப்பினர் மைத்ரெயின் கச்சத் தீவு ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததை வன்மையாக கண்டித்தார். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜா வலியுறுத்தினார். இலங்கை அரசு இதற்கு உடன்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கச்சத் தீவு முழுக்க முழுக்க இந்தியாவிற்கு சொந்தமானது என்று திமுக உறுப்பினர் கனிமொழி கூறினார்.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானதாக கச்சத் தீவு இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழக உறுப்பினர்களின் கருத்தை ஆதரித்து பேசிய வெங்கய்யா நாயுடு இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார். முன்னதாக இலங்கை கடற்படையினரால்
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவின் கனிமொழி வலியுறுத்தினார்.

0 comments:
Post a Comment