News Update :

பணவீக்கம் - அதிரடி முடிவு

Friday, September 20, 2013

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இன்று முதல் இந்திய மத்திய காலாண்டிற்கான பணக் கொள்கையை வெளியிட்டார்.

எதிர்பாராத வகையில் அதிரடியாக ரிப்போ விகிதத்தை 0.25 வீதம் அதிகரித்துள்ளார். இதன் மூலம் தற்போதைய ரிப்போ விகிதம் 7.5

ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியிடமிருந்து இதர வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி இனி 7.5% வீதமாக செயற்படும். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுனராக பொறுப்பேற்ற ரகுராம் ராஜன் இன்று மும்பையில் முதல் நிதிக் கொள்கை மீதான மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இந்த முடிவை அறிவித்தார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தி நிலைப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் உடனடியாக இது அமலுக்கு வரவுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ள ரகுராம் ராஜன், பணவீக்கத்தில் தன்னிறைவு பெற தற்போதைக்கு வழியில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, பங்குச் சந்தையில், பி.எஸ்.சி சென்ச்கெஸ்க் 500 புள்ளிகளை இழந்துள்ளதுடன் நிஃப்டி 160 புள்ளிகளை இழந்துள்ளது

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.