News Update :

தமிழ் தேசிய மொழியாகுமா?

Tuesday, September 17, 2013

உத்தரகாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த பாஜக எம்.பி. தருண்விஜய். பாராளுமன்றத்தில் பேசுகையில் தமிழ்மொழிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் .

"தமிழ்மொழி நாட்டிலேயே புராதனமான பழம்பெருமை வாய்ந்த மொழியாக திகழ்கிறது. 7 கடல்தாண்டி சிகரம் தொட்ட தமிழ் மொழியை வடஇந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வட மாநிலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ்மொழி பற்றியபாடம் இடம் பெறவேண்டும் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவேண்டும்.

தேசியளவில் தமிழ்மொழியை 2வது மொழியாக பயன் படுத்த முன்வரவேண்டும்.

அனைத்து பல்கலை கழகங்களிலும் தமிழ்பற்றிய பாடம் இடம்பெறவேண்டும். தமிழ் கற்க அரசு அதிகாரிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கவேண்டும்.

தமிழ் அறிஞர்கள் பலர் பழங் காலத்தில் கேதார்நாத் வந்துசென்று இருக்கிறார்கள். அவர்கள் வட நாட்டுக்கும், தென் நாட்டுக்கும் இடையே பாலமாக இருந்து இணைப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மையை நாம் அறியாமல் தடுத்த பெருமை நம்மை ஆள்கிறேன் என்ற பெயரில் 300 ஆண்டுகளாக கொள்ளையடித்த கிறிஸ்தவ ஆங்கிலேயனையேச் சேரும்.

ஆமாம்! மெக்காலே கல்வித் திட்டம் என்ற பெயரில் இந்தியர்களாகிய நம்மை நமது பண்பாட்டிலிருந்து பிரித்தான்; இன்று அதேவேலையைத் தான் ஆளும் அரசும் செய்து வருகிறது.உலகில் தேசபக்தியும்,தெய்வபக்தியும் ஒரே ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தேவை! அது நமக்கு மட்டுமே!!!                          
தமிழ் மொழியின் பெருமைகளை இந்தியா முழுவதும் கொண்டு சென்றால் இந்தியாவின் முதன்மை தேசிய மொழியாகவே தமிழ் அறிவிக்கப்பட்டுவிடும்;ஐ.நா.வின் முதன்மைத் தொடர்பு மொழியாகவும் தமிழ் ஆகிவிடும்;நாம் தான் ஒரு போதும் ஒருங்கிணைந்தும், திட்டமிட்டும் செயல்பட மாட்டோமே. . .!!!

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.