News Update :

தீ குண்டத்தில் விழுந்த 7 பெண்கள்

Friday, August 23, 2013

வேப்பங்குப்பம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த தீமிதி திருவிழாவில் தீமிதிக்க முந்தி செல்ல முயன்றபோது தீ குண்டத்தில் விழுந்த 7 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

வேப்பங்குப்பம் அருகே கீழ்கொத்தூர் கொல்லைமேடு முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று மாலை நடந்தது.  கூட்ட நெரிசல் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி சென்று தீமிதிக்க முயன்றபோது தவறி தீ குண்டத்தில் பெண்கள் விழுந்தனர்.  அதில் கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மாள் (50), லட்சுமி (25), தனலட்சுமி (25), ரேகா (22), செல்வி (40), கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் (55), தொரப்பாடி பகுதியை சேர்ந்த திலகவதி (35) ஆகிய 7 பெண்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.  தீ குண்டத்தில் விழுந்தவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.