News Update :

மிஸ் அமேரிக்கா - டுவிட்டர்

Tuesday, September 17, 2013

மிஸ் அமெரிக்காவாக வாகை சூடிய முதல் இந்திய வம்சாவளிப் பெண்ணான நீனா டவுலுரி மீது சமூக வலைத்தளங்களில் இனவெறித் தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

 குறிப்பாக டுவிட்டர் இணையத்தளத்தில் நீனா டவுலுரியை ஒரு அரேபிய பெண்ணாக சித்தரித்து அவரை அல் – கைதாவுடனும் தொடர்பு படுத்தி இனவெறிக் காமெண்டுக்கள் வெளியிட்டுள்ளனர் சிலர்.

எமி அட்கின்ஸ் பெயரில் வெளியிடப்பட்டுள்ள டுவிட் ஒன்றில், அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிடுங்கள். நீங்கள் தீவிரவாதியை போன்று இருக்கிறீர்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு டுவிட்டில், செப்.11 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குள் மிஸ் அமெரிக்காவாக இவர் தெரிவாகியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

பிளேயன் எம்.கேல்ட்.ரெயின் எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டில், அல் கைதாவுக்கு வாழ்த்துக்கள். எங்களது மிஸ் அமெரிக்கா, உங்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த இனவெறிக்கருத்துக்களை நிராகரித்துள்ள நினா டலுவரி, நான் இவற்றுக்கு அப்பால் வந்துவிடத் துடிக்கிறேன். எப்போதும் நான் என்னை முதலில் அமெரிக்கராக, ஏன் எப்போதும் அமெரிக்கராகவே பார்க்கிறேன் என கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை நினாவுக்கு ஆதரவாகவும் சில பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா என்பது சகிப்புத் தன்மை அல்லாத நாடல்ல. பன்முகத்தன்மை கொண்ட நாடு. நீனா வெற்றி பெற்றது மிகச்சிறந்த தெரிவு என்கிறார் எரிகா டெஸா.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.