News Update :

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு தடுப்பூசி

Thursday, September 19, 2013

இந்திய, பெண்களுக்கு மார்பகபுற்று நோய் தாக்குதல் இன்று அதிகரித்து வருகிறது. நகர் புறங்களில் வாழும் 1: 28 என்ற விகிதத்தில் பெண்களை இந்த நோய் தாக்குகிறது.

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்நோய் அதிகமாக வரும் வாய்ப்புள்ளது.மார்பக புற்றுநோய் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக சுரப்பதினால் அதிக உடல் பருமன், கொழுப்பு மிகுந்த உணவுப்பண்டங்களை உண்ணுதல்.

இளம் வயதில் பருவமடைதல், குறைந்த காலம் மட்டுமே தாய்ப்பால் கொடுப்பது போன்றவை இந்நோய் வருவதற்கான காரணங்களாக உள்ளன. மேலும், குடும்பத்தில் நெருங்கிய பெண் உறவினர்கள் ஆகியோருக்கு மார்பக புற்றுநோய் இருந்தால், அப்பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.மார்பக புற்றுநோய் வருவதை கண்டறிய மாமோகிராம் என்னும் "ஸ்கிரீனிங்' டெஸ்ட் உதவுகிறது. இதை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் ஆண்டுதோறும் மேற்கண்ட தகுந்த சிகிச்சை பெறலாம்.

இந்த மாமோகிராம் டெஸ்ட், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் கதிர்களை கொண்டு வலியின்றி செய்யப்படும்.மார்பக வலியற்ற கட்டிகள், காம்பிலிருந்து நீர் வடிதல், மார்பக நிறம் மாறுதல் போன்றவை தெரிந்தால் உடனே தக்க மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியம். இவை அனைத்தும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும்.மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் மாமோகிராம் போன்ற தற்காப்பு ஸ்கிரீனிங் டெஸ்டும் இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய உதவும். அவ்வாறு ஆரம்ப நிலையில் உள்ள இந்நோயை, தகுந்த சிகிச்சை மூலம் முற்றிலுமாக நீக்கினால் நலமுடன் வாழ முடியும்.

செர்வைகல் கேன்சர்செர்வைகல் கேன்சர் என்பது கர்ப்பப்பையின் வாய் பகுதியில் வரும் புற்றுநோய் ஆகும். இந்தியாவில் செர்வைகல் கேன்சர் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான மரணத்துக்கு முதல் காரணமாகும். கடந்த ஆண்டு 72, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் செர்வைகல் கேன்சரால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்து 82 ஆயிரத்து 027 பெண்களை இந்த புற்றுநோய் தாக்குகிறது.

கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் இந்த எச்.பி.வி., வைரசின் தாக்கத்தினால் ஏற்படும் மாற்றியங்கள் எளிய ஸ்மியர் டெஸ்ட் மூலம் கண்டறியலாம். பேப் ஸமியர் டெஸ்ட் புற்று நோய் வருவதற்கு முன் ஏற்படும் ஆரம்ப குறிகளை கண்டறிய உதவும். மேலும், தகுந்த சிகிச்சை மூலம் நோய் முற்றிலும் பரவாமல் இருக்க வழிவகுக்கும்.

தற்போது, செர்வைகல் கேன்சர் வராமல் தடுக்க செர்வைகல் கேன்சர் தடுப்பூசி உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சரை தடுக்கிறது. இந்த தடுப்பூசியை எல்லா வயது பெண்களும் போட்டுக் கொள்ளலாம். எனினும் இளம் பெண்கள் பருவமடைந்த உடனே போட்டுக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். இன்று, உலகில் செர்வைகல் கேன்சரால் இறக்கும் 4 ல் 1 பெண் இந்தியராக இருக்கிறார். இந்த கொடிய நோய் வருமுன் எளிய பேப்ஸ்மியர் டெஸ்ட் மற்றும் தடுப்பூசி மூலம் பெண்கள் நலனை காப்போம்.

குறிப்பிட்டு சொல்லப்போனால், புற்றுநோய் வகையிலேயே, இந்த ஒரு புற்றுநோயைத் தடுக்க மட்டுமே தற்போது தடுப்பூசிகள்  விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாய்ப்புகள் இருந்தாலும், இந்தியாவில், கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக ஏராளமான பெண்கள் உயிரிழப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.