சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான டப்பிங் வேலைகள் நேற்று தொடங்கியது. சூப்பர் ஸ்டாரின் இளையமகளான சௌந்தர்யா இயக்கிய இப்படம், தெலுங்கில் ”விக்ரமசிம்ஹா” என்ற பெயரில் வெளியாகிறது.
அதேபோல், ’3D அனிமேஷன்’ தொழில்நுட்பத்தில் உருவான ’கோச்சடையான்’ நவம்பர் 2ம் தேதி தீபாவளியன்று வெளியாகி, திரையில் சரவெடியாய் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நவம்பர் 1ம் தேதி வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இரண்டு வேடங்களில் வரும் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக, தீபிகா படுகோனே நடிக்க, இவர்களுடன், ஜாக்கி ஷெராப், சரத்குமார், ஷோபனா, நாசர், ஆதி, ருக்மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இது குறித்து ட்வீட் செய்த சௌந்தர்யா அஸ்வின் கூறும்போது, அனைவருக்கும் ஹாய், ’கோச்சடையான்’ தெலுங்கு வெர்ஷனில் ’விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் வெளியாகிறது. நேற்று (ஆகஸ்ட் 25) தெலுங்கு பதிப்பிற்கான டப்பிங் வேலைகள் தொடங்கியது, என்று ட்வீட் செய்திருந்தார்.
ஹாலிவுட்டின் அவதார், டின்டின் படங்களுக்கு இணையாக, 3D அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்ச்சூர் தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்திற்கு, ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், கோச்சடையான் திரைப்படம் வெளியாகும் தேதியை படத்தின் தயாரிப்பு நிர்வாக அதிகாரி உறுதிபடுத்தினால் மட்டுமே, இந்த தீபாவளிக்கும், இவ்வளவு நாள் எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கும், ஒரு பெஸ்டிவல் போனஸாக இருக்கும்.

0 comments:
Post a Comment