மெட்ராஸ் கபே… – அப்பட்டமாக தமிழருக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது. இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் ஈழத்தைச் சூறையாடிய ராஜீவ் காந்தியை நாயகனாகவும், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்களின் தலைவரை பொறுக்கிகள், தீவிரவாதிகள், பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்பது போலவும் சித்தரித்த கேவலமான படம்.
மூன்றாம் தரமான காட்சியமைப்புகள் கொண்ட இந்தப் படம் வேறு ஏதாவது ஒரு பெயரில் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. மெட்ராஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்… விளம்பர வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை.
படம் விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்டது, ராஜபக்சே நிதியுதவியால் எடுக்கப்பட்டது, குறிப்பாக தமிழினப் படுகொலையில் படிந்த ரத்தக் கறைகளைக் கழுவ காங்கிரஸ் மேற்கொண்ட தந்திர முயற்சி என்ற தகவல்கள் வெளியானதுமே விழிப்படைந்த தமிழ் அமைப்புகள், களத்தில் இறங்கின.
ஒரு பக்கம் மதிமுகவின் வைகோ… மறுபக்கம் நாம் தமிழர் சீமான்.. இன்னும் பல தமிழ் அமைப்புகள் இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகில் தமிழர் வாழும் எப்பகுதியிலும் வெளியாகக் கூடாது, வெளியாகாமல் பார்த்துக் கொள்வது தமிழர் கடமை என்று அறைகூவல் விடுத்தனர்.
வெறும் வீராப்பு அரசியலாக இதை எடுத்துக் கொள்ளவில்லை. வியாபாரிகள் என நாம் பார்க்கும் தியேட்டர்காரர்களும்கூட இந்த அறைகூவலை அலட்சியப்படுத்தவில்லை.
ஒரு அமைப்பாக சேர்ந்து ஒரு படத்தைத் திரையிட மாட்டோம் என்றால் அது சட்ட ரீதியான சிக்கலைத் தரும் (விஸ்வரூபம் தந்த பாடம்) என்பதால், தனித்தனியாக இந்தப் படத்தை திரையிட மறுப்புத் தெரிவித்தனர்.
தமிழ் – இந்தி என எந்த மொழியிலும் தமிழகத்தில் இந்தப் படம் வெளியாகவில்லை. தமிழர்கள்தானே.. எப்படியும் வெளியாகிவிடும் கவலை வேண்டாம் என ராஜபக்சே போன்றவர்கள் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அந்த நம்பிக்கையில் வெள்ளிக்கிழமை காலை கூட படம் தமிழகத்தில் வெளியாகும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஜான் ஆபிரகாம் கூட்டத்தினர்.
இந்தியாவின் பிற மாநிலங்களிலும், கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட தமிழர் அதிகம் வசிக்கும் நாடுகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அங்கு படத்துக்கு வரவேற்பும் இல்லை.
கனடாவில் வெளியான இந்தப் படத்தைப் பார்க்க ஒருவர் கூட தியேட்டருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் உண்மையான தடை!
இந்த தமிழர் விரோதப் படம் வெளியான அனைத்து இடங்களிலும் படுதோல்வியைத் தழுவியிருப்பது இன்னொரு முக்கியமான விஷயம். இத்தனை மெட்ராஸ், தமிழர்கள் ஆகியவற்றை மட்டுமே வைத்து கிளம்பிய பரபரப்புதான் இந்தப் படத்தை செய்திகளில் இருக்க வைத்தது. இல்லாவிட்டால், வழக்கமாக இந்தியில் வெளியாகும் ஒரு மூன்றாம் தரப் படமாக காணாமல் போயிருக்க வேண்டிய குப்பை இது!
கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டியதே. ஆனால் வரலாற்றைத் திரிக்கவும் கண்ணெதிரே நடந்த கொடுமைகளை மண்மூடி மறைத்து ஆதாயம் தேடப் பார்க்கவும் அந்த கருத்து சுதந்திரம் உதவினால்… மெட்ராஸ் கபேக்களுக்கு நேர்ந்ததுதான் இனி எந்தப் படைப்புக்கும்!

0 comments:
Post a Comment