News Update :

சில வாண்டுகளின் நகைச்சுவை

Thursday, August 22, 2013


வீடுகளில் உள்ள சில வாண்டுகள் செய்யும் நகைச்சுவை பெரிய அக்கப்போறாக இருக்கும்.
அவற்றில் சிலதை பார்க்கலாம்.
வாத்தியார் : என்னடா நோட்டுல பால் - 15 ரூபாய், அரிசி 40 ரூபாய்னு எழுதி வச்சிருக்கே..
மாணவன் : நீங்க தானே வாத்தி சொன்னீங்க.. நாளைக்கு வரும் போது வீட்டுக் கணக்க மறக்காம எழுதிக்கிட்டு வறணும்னு..
வாத்தியார் :...?
•••
ஆசிரியர் : ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் முன்பு கடவுளிடம் பிரார்த்தனை செய்த பிறகு சாப்பிடுங்கள்...
மாணவன் : அவசியமே இல்லைங்க சார்.. எங்க அம்மா நல்லாத்தான் சமைப்பாங்க..
•••
முதல் நாள் பள்ளியில் இருந்து வரும் சிறுமியிடம் தாய் கேட்கிறார்...
செல்லமே.. உனது முதல் நாள் பள்ளி வாழ்க்கை எப்படி இருந்தது?
குழந்தை : முதல் நாளா.. அப்படின்னா நான் நாளைக்கும் அங்கே போகணுமா?
•••
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.