News Update :

நாட்டின் பொருளாதாரம் குறித்த விவாதம்

Thursday, August 29, 2013

பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்தான எதிர்கட்சிகளின் கோரிக்கை எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி நாட்டின் பொருளாதாரம் குறித்து கேள்வி எழுப்பி பேசினார். அவர் மேலும் கூறுகையில் நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு சீர்குலைத்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார நிலை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கூறினார்.

உள்நாட்டு காரணிகளால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க கூடாது. அமெரிக்க ஊக்க பிரச்சினை போன்ற சர்வதேச காரணிகள் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சிக்கலான பொருளாதார பிரச்சனையை நாடு எதிர்க்கொண்டுள்ளது. நாளை பொருளாதார பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் அறிக்கை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் மாநிலங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

இதற்கிடையே ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.