டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அதிக அளவில் கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதே, இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். எனவே, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அதன்படி பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடுவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக, பெட்ரோலியத் துறை மந்திரி வீரப்பமொய்லி நேற்று கூறி இருந்தார்.
இந்த திட்டத்திற்கு பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், இரவில் பெட்ரோல் விற்பனைக்கு தடை விதிக்கும் திட்டத்தை நிராகரித்துவிட்டார். மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும் வீரப்ப மொய்லியின் இந்த யோசனையை ஏற்கவில்லை.

0 comments:
Post a Comment