இந்திய, இலங்கை கடற்பகுதியை, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களும் 70 நாள்களுக்கு பயன்படுத்திக் கொள்வதற்கான, மீனவர் அமைப்புகளின் செயல் திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து, கொழும்புவில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச கடல் எல்லைக்கோடு கருத்துருவை, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இதை எற்று, ஒப்பந்தத்தில் அந்த நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. எனவே, தமிழக அரசோ அல்லது அம்மாநில மீனவர்களோ சர்வதேச கடல் எல்லையை மீற முடியாது.
இந்திய கடற்பகுதியை இலங்கை மீனவர்களும், இலங்கை கடற்பகுதியை இந்திய மீனவர்களும் 70 நாள்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, இருநாட்டு மீனவர் சங்கங்களும் பரஸ்பரம் செயல்திட்டம் தயாரித்து அளித்தன.
அதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். மீனவர் சங்கங்களின் செயல் திட்டம் ஏற்கப்பட்டால், இலங்கையின் வடக்குப்பகுதி மீனவர்களுக்கு அநீதி இழைத்ததாகி விடும். சிங்கள மீன்வளத்துறை அமைச்சர் இலங்கைத் தமிழ் மீனவர்களிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்ற குற்றம்சாட்டு என் மீது வரும்.

0 comments:
Post a Comment