News Update :

தாய் அல்ல இவள் - பேய்

Monday, August 26, 2013

மும்பையில் உள்ள கல்வா பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்த 16 வயது சிறுமிக்கு அவரது தாயே எச்ஐவி தொற்று தாக்கிய ஒரு நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைத்து, சிறுமி அந்த நபரோடு உடலுறவு வைத்துக்கொள்ள மறுத்தப்போது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து அந்த நபருக்கு உதவி புரிந்த கொடூரம் நடந்துள்ளது.

சிறுமியின் தாய்க்கு தூரத்து சொந்தமான அந்த நபர் சிறுமியின் குடும்பத்திற்கு அவ்வபோது பண உதவி செய்துவந்துள்ளார். இதனை வைத்து சிறுமியை தனக்கு திருமணம் செய்துக்கொடுக்கும் படி அந்த நபர் கூறியதற்கு சிறுமியின் தாயாரால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.

30 வயது நிரம்பிய அந்த நபரை மணந்துக்கொள்ள அச்சிறுமி எவ்வளவோ மறுப்பு தெரிவித்தபோதும், அவரது தாய் கேட்கவில்லை. கடந்த மே மாதம் எச்ஐவி தொற்றால் பாதிக்கபட்டவர் எனத் தெரிந்த பிறகும் சிறுமிக்கும் அந்த நபருக்கும் திருமணம் முடிந்துள்ளது.

திருமணம் முடிந்தபின் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள அந்த நபர் முயலும் போதெல்லாம் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து அச்சிறுமியை அடித்து, துன்புறுத்தி சில வேளைகளில் மயக்க மருந்து கொடுத்துக்கூட சிறுமியின் தாய் அந்த நபரின் சொல்படி நடக்குமாறு சிறுமியை வற்புறுத்தியுள்ளார்.

தாய் மற்றும் கணவரின் கொடுமையிருந்து தப்பிக்க இச்சிறுமி பல முறை முயன்றப்போதும், தற்கொலை செய்துகொள்வேனென தாய் மிரட்டியபின் அதனை கைவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரின் கொடுமை தாங்கமுடியாத அச்சிறுமி, அவரின் முன்னாள் ஆசிரியர் ஒருவரின் உதவியோடு குழந்தைகள் நல மையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியிருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்.

மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ள அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.