News Update :

ஆவடியில் ஆவி

Friday, August 23, 2013

ஆவி உலவுவதாக ஆவடி பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில்,ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது, நள்ளிரவில் இந்த மின் கம்பத்தை பார்த்து நாய்கள் குரைப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அத் துடன் அந்த பகுதியில் ஒரு பெண் அழுவது போல் குரல் கேட்பதாகவும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த தகவல் கசிந்து ஆவடி யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. காட்டுத்தீ போல் பரவிய தகவலால் அப்பகுதிவாசிகளுக்கு பீதி ஏற்பட்டுள்ளது.

ஆவி உலவும் தகவல் அத்துடன் நிற்கவில்லை. மின்கம்பத்தை பார் த்து நாய்கள் குரைத்ததை அந்த பகுதியை சேர்ந்த சிலர் நோட்டமி ட்டு அலைபேசியில் படம் பிடிக்க முயன்ற போது, வெள்ளை புடவை அணிந்து இடது கையால், மின்கம்பத்தை பிடித்தபடி ஒரு பெண் சுற்றி வருவது போன்ற காட்சி பதிவானதாகவும் தகவல் பரவியது. அந்த தகவல் பரவியதும் மின் கம்பத்தில் இருந்த தெரு விளக்கு எரி வதில்லை. இதற்கு காரணம் ஆவிதான் என்றும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது: அமா வாசை தினம், நெருங்க, நெருங்க நாய்கள் குரைப்பதும், பெண்ணி ன் அழுகுரல் மற்றும் அலறல் சத்தம் கேட்கிறது. பெண்ணின் உருவ த்தை அலைபேசியில் படம் பிடிக்க முயன்றபோது, அது பழுதடைந்து விட்டது. இதனால் பீதி மேலும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தகவல் பல்வேறு விதமாக உலவுகிறது. ஆவடிப் பகுதி யில் ஆவி உலா பேச்சு பரபரப்பாகியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: சுடுகாட்டை கூட தற்போது ஆக்கிரமித்து, வீடு கட்டிவருகிறார்கள். கடந்த பத்து ஆண் டுகளுக்கு முன்பு, கிராமப்புறங்களில், திருட்டுத்தனமாக சிகரெட் குடிக்க சுடுகாட்டுக்கு செல்லும் இளைஞர்கள், வேட்டியை அவிழ் த்து போர்த்திக்கொண்டு, பெண் குரலில் பேசி அவ்வழியே செல்பவர் களை பயமுறுத்துவர். அதுபோன்று யாரேனும் செய்திருக்கலாம். அல்லது, ஆவி அலைவதாக கூறி மக்களிடம் பணம் பறிக்க இது போன்ற தீய வழிகளை கையாண்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.