News Update :

இந்திய எல்லைக்குள் மீண்டும் சீனப்படைகள் ஊடுருவல்

Thursday, August 22, 2013

புதுடில்லி: காஷ்மீர் பகுதியை விட்டு, தற்போது அருணாச்சல் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவி, சீனப்படைகள் அட்டூழியம் செய்துள்ளது. சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் அருணாச்சல்பிரதேசம் வழியாக சீனாப்படையினர் ஊடுருவி அட்டூழியம் செய்ய துவங்கியுள்ளனர்.
காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும் சீன வீரர்கள், அங்கு முகாம்களையும் அமைத்து வருகின்றனர்.
தீர்வு காணப்படாத எல்லை பிரச்னை
இந்தியா-சீனா இடையே எல்லை பேச்சுவார்த்தையில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. நேற்று ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. அதே நேரத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்துக்கு, நம் விமானப் படைக்கு சொந்தமான ஐ.ஏ.எப்.-சி 130 ஜெ. ரக சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் திட்டமிட்டபடி, அந்த விமான தளத்தில் தரையிறங்கியது. உலகிலேயே, மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான தளத்தில், இந்திய விமானப் படை விமானம் தரை இறக்கப்பட்டது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
அருணாச்சலில் ஊடுருவல்
இதையடுத்து இந்தியாவை மிரட்ட ,சீனா எல்லையில் தனது அட்டூழியத்தை காட்டத் துவங்கியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் பிரதேசத்தின், அஞ்சாவ் மாவட்டத்தின் சக்லாஹாம், எல்லைப்பகுதியில் கடந்த 13-ம் தேதி சீனாவின் பி.எல்.ஏ. எனப்படும் மக்கள் ராணுவப்படையினர் 30 கி.மீ. வரை ஊடுருவியுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் அப்பகுதியில் முகாம் அமைத்து, இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இப்பகுதியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் கண்காணித்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பை மீறி எல்லைக்குள் ஊடுருவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உதவி தேவையில்லை
சீன ஊடுருவல் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவசங்கர்மேனன், அமெரிக்காவில் கூறுகையில், சீன ஊடுருவல் விவகாரத்‌தினை அமெரிக்காவிடம் ‌கொண்டு சென்று முறையிட இந்தியா விரும்பவில்லை. இதில் அமெரிக்காவின் உதவியை இந்தியா எதி்ர்பாக்காது என பேசினார்.
Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.